சம்பந்தர்கண்டி, காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மீரா பாலா அவர்கள் தமது பெற்றோருடன் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வந்து தற்போது ரொறன்ரோ கல்விச் சபையின் ஆசிரியையாக கடந்த 19ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர். நிலத்திலும் புலத்திலும் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் “Palm Trees Under Snow” என்கின்ற சிறுவர்களிற்குப் பயன்படக்கூடிய அற்புதமான சிறந்த கதை நூலினை எழுதிய மீரா பாலா அவர்கள், எதிர்வரும் 12-03-2021 அன்று இந்நூலினை இணையவழி ஊடாக வெளியிட்டு வைக்கவுள்ளார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வில் யோர்க் பிராந்திய கல்விச் சபையின் உறுப்பினரான(Trustee) ஜெனிற்றா நாதன் அவர்கள் கலந்துகொண்டு நூல் குறித்த விமர்சனத்தினை நிகழ்த்தவுள்ளமை சிறப்பானதாகும்.
காரை.இந்துவின் பெருமைக்குரிய பழைய மாணவனும், சிறந்த சமய, சமூகச் செயற்பாட்டாளரும், மீரா பாலா அவர்களின் பேரனுமாகிய அமரர் அருணாசலம் நாகலிங்கம் அவர்கள் மலேசியாவிற்குச் சென்று உத்தியோகம் பார்த்து வந்த காலத்தில் “சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்” என்கின்ற நாவல் இலக்கியத்தினை 1927ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டிருந்தார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் முதல் இலக்கியப் படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சிறப்பும், தமிழ்நாட்டு அறிஞர்களின் பாராட்டினைப் பெற்ற பெருமையையும் கொண்டு விளங்குவது இந்நூலாகும். தனது பேரனாரைப் பின்பற்றி தானும் நூல்களை எழுதி வெளியீடு செய்யவேண்டும் என்கின்ற தனது எண்ணக்கரு இன்று “Palm Trees Under Snow” என்ற நூல் வடிவில் தோற்றம் பெற்றுள்ளமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிடும் மீரா பாலா அவர்கள், தனது இந்த வெற்றிக்கு தனது பேரனாரின் எழுத்துலக சாதனை முன்மாதிரியாக அமைந்து மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்ததே அடிப்படையாக இருந்தது என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்தார். பலதரப்பட்ட கலாசாரப் பின்னணிகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலான சிறுவர்களிற்குப் பயன்மிக்க நூல்களை எழுதி வெளியிடுவதே தனது எதிர்கால இலக்கு எனக் குறிப்பிடும் மீரா, ஆசிரியை என்ற வகையில் பல்கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற பிள்ளைகளுடன் பழகுகின்ற வாய்ப்பின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், எனது முயற்சிக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கையினையும் வெளியிட்டார்.
திருமதி மீரா பாலா அவர்களின் தந்தையாரான திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டு உறுப்பினர் என்பதுடன் தாயாரான திருமதி வனிதாதேவி குஞ்சிதபாதம் அவர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருமதி மீரா பாலா அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்து சாதனை நிலைநாட்டியமை குறித்து அவரைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரது எழுத்துலகப் பணி சிறப்புப் பெற்று பயனுள்ளதாக அமைந்து விளங்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.
நூல் குறித்த சுருக்கமான விபரம், நூலாசிரியரைப் பற்றிய சுருக்கமான விபரம், நூலினைப் பெற்றுக்கொள்வதற்கான தொடர்பு விபரம் என்பன ஆங்கில வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன.
Book Information
Palm Trees Under Snow
Growing up, Maya was surrounded by palm trees, the ocean breeze, and a big extended family. Maya’s life takes a turn as she witnesses her beautiful island being destroyed by the war. Maya’s parents decide to immigrate to another county to find peace and safety. When she arrives in the new country, Maya can’t speak the language and no one at school wants to be her friend. Will Maya ever feel a sense of belonging in her new home?
Book Benefits
This picture book is for children ages 7 to 11 years.
-It is a beautifully written story about the hardships and challenges a child faces in a war-torn country.
-A heartfelt story about the plight of immigration and a struggle with identity and belonging.
-Palm Trees Under Snow stresses the importance of empowerment through education and celebrates the power of hope and hard work.
-The book encourages empathy and compassion and addresses the themes of diversity, inclusion, and tolerance.
-It includes beautiful vibrant illustrations. Palm Trees Under Snow will stimulate many important discussions at home and in the classroom!
About the Author
Meera Bala is a Tamil-Canadian author and publisher of children’s books. She graduated from York University’s Concurrent Education Program with a Bachelor of Education and Bachelor of Arts (Hons) in English. As a teacher with the Toronto District School Board for the past 19 years, she enjoys sharing her love of reading and writing with her students. She is a huge advocate of social justice and equity issues within the TDSB and served as the equity representative at her school for many years. Her first book, Palm Tress Under Snow is based on Meera’s own experience of immigrating from Sri Lanka to Canada in the 1980s. Her mission is to write books that represent a variety of cultural backgrounds. She believes that it is important for children to make connections with the lives of the characters and see themselves in their stories.
Contact/Purchase Information
Palm Trees Under Snow can be pre-ordered at www.wordsbymeera.com
It will also be available worldwide on Amazon starting March 12th, 2021.
Meera will be having a virtual launch with her family and friends on March 12th.
Please visit www.wordsbymeera.com for more information on Palm Trees Under Snow and her upcoming projects.
நூலின் முகப்பு அட்டை, நூல் ஆசிரியை திருமதி மீரா பாலாவின் புகைப்படம், நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்த விளம்பரக் காணொளி(Trailer) என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.
நூல் ஆசிரியை திருமதி மீரா பாலா
நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்த விளம்பரக் காணொளி(Trailer)
No Responses to “காரை.இந்துவின் கல்விப் பாரம்பரியத்தின் வழிவந்து சாதனை படைப்போர் வரிசையில் இணைந்து கொண்டுள்ள மீரா பாலா அவர்கள் எழுதிய “Palm Trees Under Snow” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு.”