கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் அனைத்துலக பெண்கள் நாளும், சாரணயத்தின் தந்தையாகிய பேடன் பவலின் நினைவு நாளும் அண்மையில் கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மருத்துவர் செல்வி.ந.ஆறுமுகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினராக பெண்கள் சாரணிய அமைப்பின் வடமாகாண ஆணையாளர் திருமதி.ரூபா வசந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
அனைத்துலக பெண்கள் நாள்
பிரெஞ் புரட்சியின்போது பாரிசில் உள்ள பெண்கள் சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1789 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் பிரதிநிதித்துவம் வகிக்கவும், வாக்குரிமை பெறவும் அனுமதித்த நாளாகிய மார்ச் 8 ஆம் நாள் அனைத்துலக பெண்கள் நாளாக ஐக்கிய நாடுகள் அவையினால் பிரகடனப்படுத்ப்பட்டு உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பேடன் பவல் நினைவு நாள் அல்லது ‘உலக சிந்தனை நாள்’
வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, நாட்டுப்பற்று, அன்பு, மனிதநேயம், மரியாதை, துணிவு போன்ற ஆளுமை விருத்திகளைக் கொண்டு மனிதநேயப் பண்புகளுடன் சேவை புரிவதன் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக விளங்கும் ‘எதற்கும் தயாராக இரு’ எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேடன் பவல் 22.02.1857 அன்று பிறந்தார்.
சாரணியத்தின் தந்தையாகிய பேடன் பவலின் பிறந்த தினமாகிய பெப். 22 உலக சாரணர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1932 இல் பெண் சாரணிய அமைப்பு இந்நாளை ‘சிந்தனை நாள்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டாடி வந்தது. 1999 முதல் இத்தினம் பெண் சாரணிய அமைப்பினால் ‘உலக சிந்தனை நாள்’ என்ற பெயரில் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிகின்றது.
இந்நாளில் இலங்கைச் சாரணர்களும் உலகளாவிய சாரணர்களும் சாரணியத்தின் இலட்சியங்களையும் நோக்கங்களையும் நினைவுகூர்ந்து பாராட்டி நன்றி கூறும் தினமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்தவகையில் இவ்விரு தினங்களையும் ஒரே நாளில் கொண்டாடும் வகையிலேயே எமது பாடசாலையின் பெண்கள் சாரணிய அமைப்பினால் இத்தினங்கள் பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்டன.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்
No Responses to “அனைத்துலக பெண்கள் நாளும் பேடன் பவல் நினைவு நாளும்”