இடப்பெயர்வின்போது சேதமாக்கப்பட்டிருந்த சயம்பு சிலை மீளப் புனரமைக்கப்பட்டிருந்ததாயினும் அது சேதமடைந்திருப்பதுடன் இச்சிலையின் முகத்தோற்றம் திருப்தி அளிப்பதாகவில்லை என்ற விமர்சனமும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனை நல்லமுறையில் முழுமையாக அமைக்கவும் சேதமடைந்துள்ள அதன் அமைவிடத்தை புனரமைத்து வர்ணம் பூசவும் தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் முன்வந்து முற்கட்டமாக நான்கு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை சென்ற ஆண்டு உதவியிருந்தார். திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் காரை.இந்துவின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனைகொண்டு தொடர்ச்சியாக பல உதவிகளை வழங்கி வருபவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிலை அமைந்துள்ள மண்டபத்தை பனரமைத்து பாதுகாப்பு வேலிகள் அமைக்க மகாதேவன் அவர்களே உதவியிருந்தமை இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இவரது முழுமையான அனுசரணையுடன் தனியார் கல்வி நிலைய முன்னாள் ஆசிரியரான அமரர் குமாரவேலு மாஸ்டர் அவர்களது ஞாபகார்த்தமாக ஐந்து இலட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக உதவி வழங்கும் வகையிலான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் இவர் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கத்தின் செயலாளர் சென்ற மார்ச் மாதம் பாடசாலைக்குச் சென்ற சமயம் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பாச்சாரி ஒருவர் மூலம் இச்சிலையினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அதிபர் மற்றும் தாய்ச் சங்க நிர்வாகத்துடன் இணைந்து செய்திருந்தார். சிலை அமைப்பதற்கான வேலைகள் 11-06-2024 திங்கட்கிழமை சமயரீதியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சிற்பாச்சாரியருடன் அதிபரும் ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர். நடராசா ஞாபகார்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில்; வட-கிழக்கு மூலையில் வைத்து இச்சிலையினை அமைக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இச்சிலையினை அமைக்கவும் அதன் அமைவிடத்தை புனரமைக்கவும் முன்வந்த தொழிலதிபரும் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பெரும் பங்களித்து வருபவருமாகிய திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் இப்பணியினை ஆரம்பிக்க முன்முயற்சி எடுத்து ஒத்துழைத்து வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
No Responses to “தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுசரணையில் நிறுவுனர் சயம்புவின் சிலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.”