நான்கு கணனிகளும் இணைய இணைப்பிற்காக ரூ52,000 ரூபாவும் அன்பளிப்பு
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வித்திணைக்களத்தின் 6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2012 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகம் (E-Library) அதற்கான கணனிகளோ, இணைய இணைப்போ இல்லாமல் வெறும் கட்டிடமும் கதிரைகளுடனும் கவனிப்பார் யாருமின்றி கல்லூரி மாணவர்களின் கல்விப்பசியைத் தீர்ப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்துக் கிடந்தது.
இதனை கருத்தில் கொண்ட பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் விரைந்து செயற்பட்டு மேற்படி இலத்திரனியல் நூலகத்தை இயங்க வைப்பதற்காக நான்கு மீள்பாவனைக்குரிய கணனிகளையும் அதற்குரிய உதிரி உபகரணங்களையும் கல்லூரிக்கு அண்மையில் வழங்கி உதவியிருந்தனர்.
அத்துடன் இலத்திரனியல் நூலகம், பல்லூடக அறை, அதிபர் அலுவலகம் ஆகியனவற்றிற்கான இணைய இணைப்பினை ஏற்படுத்துவதற்காக ரூ 52,000 ரூபா நிதி அன்பளிப்பினையும் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் வழங்கி உதவியிருந்தனர்.
இதேவேளையில், பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரிக்கு ஐந்து கணனிகளும், காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலகம், கிளிநொச்சி குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கிளிநொச்சி தம்பிராசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியனவற்றிற்கு தலா ஒரு கணனிகளுமாக மொத்தம் 12 கணனிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் இலத்தினியல் நூலகத்தில் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கணனிகளை தொழில்நுட்பவியலாளர்கள் இயங்க வைத்து இணைய இணைப்பினை ஏற்படுத்துவதனையும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் மற்றும் மாணவர்கள் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
No Responses to “லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கல்லூரியின் இலத்திரனியல் நூலகம் இயங்க வைக்கப்பட்டுள்ளது”