கல்லூரியின் உயர்தர மாணவர் மன்றத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (07.06.2014) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன்.சு.டனோஜன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி. வீரமங்கை ஸ்ரலினா யோகரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.துரைராஜசிங்கம் லெனின் அறிவழகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தொழலதிபரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.சண்முகம் சிவஞானம் அவர்களும், கௌரவ விருந்தினராக கொழும்ப வலய ஒய்வுநிலை ஆசிரிய ஆலோசகரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களும் அயல் பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இவ்விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைக்க செல்வி.தெய்வேந்திரம் மேகலையின் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் தொடங்கி செல்வி.தே.றோஜானா வருகை தந்திருந்த விருந்தினரை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் சு.டனோஜன் தலைமையுரை நிகழ்த்தினார்.
கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்க விருந்துபாசார நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் அனைவரும் சிறப்புரை ஆற்றினார்கள்.
மதிய போசனத்தைத் தொடர்ந்து செல்வி நவரட்ணரரஜா டினோஜாவின் நன்றியுரையுடன் விருந்துபசார நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “உயர்தர மாணவர் மன்ற ஒன்று கூடலும் மதிய போசன விருந்துபசார நிகழ்வும்”