பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இன்னிசை முழக்கம் இசை நிகழ்வு உன்னதம் பெற்ற வெற்றி நிகழ்வாக நடந்தேற உதவிய பின்வரும் நல்லுள்ளங்களுக்கு சங்க நிர்வாகம் சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றது.
சங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வருகை தந்து நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வை மேன்மைப்படுத்தியது மட்டுமல்லாது கல்லூரி அன்னையை பெருமைப்படுத்திய அன்னையின் புதல்வனும் இயந்திரப் பொறியியலாளரும், புவி விஞ்ஞானியுமாகிய சிற்றம்பலம் திருஞானசம்பந்தன்.;
எமது அழைப்பினை ஏற்றுக்கொண்டு நிகழ்வின் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ளவிருந்தாராயினும் தவிர்க்கமுடியாத காரணங்களினால் கலந்துகொள்ள முடியாதுவிடினும் நிகழ்வின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த சுவிற்சலாந்து Siva Travel பிரயாண முகவர் நிறுவனத்தின் அதிபர் சிவா கனகசுந்தரம்
மங்கள விளக்கேற்றி வைத்து மங்களகரமாக நிகழ்வினை தொடக்கிவைத்திருந்த நிகழ்வின் பிரதம விருந்தினரான திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன், கனடா சைவ சிந்தாந்த மன்றத்தின் தலைவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகருமாகிய சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், அவரது பாரியார் வடிவழகாம்பாள், குழந்தைமருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம், தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம், கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவரும் கணக்காளருமாகிய வே.இராஜேந்திரம், அவரது பாரியாரான கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவ தலைவி கமலாதேவி, பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் போசகருமாகிய முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவரது பாரியார் புஸ்பலீலா
கடவுள் வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, கனேடிய தேசியப் பண் ஆகியவற்றை அழகுற இசைத்த சிறுமிகளான செல்வி பவிஷா மோகனேந்திரன், செல்வி நிந்துஜா மோகனேந்திரன்
தமிழகத்திலிருந்து வருகைதந்து அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கி அனைவரையும் பரவசப்படுத்திய பின்னணிப் பாடகர் சுப்பர் சிங்கர் சாய்சரண் அவர்கட்கும், அவரது இசைக்கு பக்க இசை வழங்கி உன்னதம் சேர்த்த கலைஞர்களான சங்கீதகலாவித்தகர் ரி.என்.பாலமுரளி, மிருதங்ககலாவித்தகர் ரதிரூபன் பரஞ்சோதி, கடம், தபேலா இசைத்த கலைஞர் திரு.நரேந்திரா தில்லையம்பலம், மேகா ரியூனேர்ஸ் கீபோட் கலைஞர் திரு.மகேசன் அரவிந்தன், வீணை இசைத்த கலைமாமணி ராஜேஸ்வைத்தியாவின் மாணவி செல்வி பிரியா ரட்ணகுமார்
அழகியமுறையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தது மட்டுமல்லாது விளம்பரப் பிரசுரங்களையும் நுழைவுச் சீட்டுக்களையும் அழகியமுறையில் வடிவமைத்து உதவிய
கல்லூரியின் பழைய மாணவனான பிரபல அரங்க அறிவிப்பாளர் பா.ஞானபண்டிதன்
நிகழ்வு சிறப்பாக அமைவதற்கும், கல்லூரியின் மேம்பாட்டிற்கு உதவுதல் என்கின்ற சங்கத்தின் இலக்கினை அடைவதற்கும் அனுசரணை வழங்கி ஊக்குவித்தவர்களான
Platinum Sponsors:
குழந்தைமருத்துவ நிபணர் மருத்தவகலாநிதி வி.விஜயரத்தினம்
Double Seal Insulating Glass Ltd, Clearrex, ஆகிய நிறுவனங்களின் அதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம்
வீடு விற்பனை முகவர் நடராசா ஜெயகுமார்(ஜே நடராசா)
Olympic Wood, Olympic Development, Dream Doors Inc. ஆகிய நிறுவனங்களின் அதிபர் திரு.கருணாகரன் பஞ்சலிங்கம்
சுவிற்சலாந்து Siva Travel பிரயாண முகவர் நிறுவனத்தின் அதிபர் சிவா கனகசுந்தரம்
Gold Sponsors:
karainews.com இணையத்தளத்தின் தொகுப்பாளர் தீசன் திரவியநாதன்
வீடு விற்பனை முகவர் கண்ணன் நடராசா
Silver Sponsors:
வீடு விற்பனை முகவர் ராஜ் நடராசா
வீடு விற்பனை முகவர் ரவி ரவீந்திரன்
காசிப்பிள்ளை சக புத்திரர்கள் நிறுவன அதிபர் மு.காசிப்பிள்ளை
Andy Auto அதிபர் அன்டி திருச்செல்வம்
Airport Limo Service 101 திருவேங்கடம் சந்திரசோதி
ஊடக அனுசரணை வழங்கிய ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் குலசேகரம் பரமேஸ்வரன்
நிகழ்வினை சிறப்பாக அமைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்ததுடன் வேறும் பல வகையில் ஒத்துழைப்பு நல்கிய
குழந்தைமருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம்
மிருதங்ககலாவித்தகர் ரதிரூபன் பரஞ்சோதி
வீணாலயம் Temple of Music அதிபர் திருமதி ஜெயந்தி ரட்ணகுமார்
இசைக்கலைமணி பராசக்தி விநாயகதேவராசா
வாழ்த்துச் செய்திகள் வழங்கி நிகழ்விற்கு வலுச்சேர்த்தவர்களான
கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன்
பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினர்
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையினர்
எமது சங்க போசகர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம்
இலவசமாக வீடியோ படமாக்கி உதவிய K.K.Electronics நிறுவனத்தின் அதிபர் பொன்னம்பலம் குழந்தைவேலு
இலவசமாக புகைப் படங்கள் எடுத்து உதவிய K.K.Electronics நிறுவனத்தின் திருமதி மலர் குழந்தைவேலு
சிற்றுண்டிகள், தேநீர் என்பவற்றை சிறந்த முறையில் சபையினருக்கு பரிமாறித் தொண்டாற்றிய சிறுவர்கள்
துல்லியமான ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஒத்துழைத்த யதுநந்தன்(யது)
மண்டப ஏற்பாடுகளில் ஒத்துழைத்து உதவிய கனடா கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினர்
நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டும், நன்கொடைகள் வழங்கியும் எமது சங்கத்தின் நோக்கம் நிறைவேற பேராதரவு தந்ததுடன் நிகழ்வில் கலந்துகொண்டு இந்து அன்னையை பெருமைப்படுத்திய பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்
மேற்குறித்த நன்றிக்குரிய உள்ளங்களின் பட்டியலில் எமக்கு உதவிய எவராவது தவறுதலாக விடுபட்டிருந்தால் அவர்கள் அதனை பெருமனதுடன் மன்னித்துக்கொள்வார்கள் என நம்புவதுடன் மீண்டும்
அனைவருக்கும் சிரம் தாழ்த்தி எமது உளமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகின்றோம்.
நிர்வாகம், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நெஞ்சார்ந்த நன்றிக்குரிய நல்லுள்ளங்கள்.”