காரை.மண்ணுக்கு மட்டுமல்லாது ஈழத்து சைவத்தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் புகழ்சேர்த்தவரும் இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காரை மண்ணில் வாழ்ந்த பன்முகப் புலமை மிக்கவருமாகிய பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அவரது மகத்தான சைவத் தமிழ் இலக்கியப் பணிகளை உள்ளடக்கிய வரலாற்று நூலாக ‘கார்த்திகேயப் புலவர் மலர்’ என்கின்ற நூல் கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் மீளப் பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்படுகிறது. புலவரின் கனிஷ்ட புத்திரன் சிவசிதம்பர ஐயர் அவர்களால் எழுதப்பட்டு இரண்டாவது புதல்வன் நடராஜக் குருக்கள் அவர்களால் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்பெற்ற புலவர் அவர்களின் வரலாற்று நூலே கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் 2வது பதிப்பாக வெளியிடப்படுகிறது.
புலவரின் பேரனான பிரம்மஸ்ரீ.கா.சி.மகேசசர்மா F.R.A.S. அவர்கள் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் என்பதுடன் புலவரின் பீட்டனான பண்டிதர் கலாநிதி க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச் செல்வர் தி. விசுவலிங்கம் தலைமையில் எதிர்வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிசிசாகா கூட்டுறவு இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ள குறித்த நூலின் வெளயீட்டு வைபவத்தின் அறிவித்தலை கீழே பார்வையிடலாம்:
No Responses to “கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள ‘கார்த்திகேயப் புலவர் மலர்’ நூல் வெளியீட்டு வைபவம்”