காரைநகர் இந்துக் கல்லூரியின் அவசிய தேவைகள், கல்விச் செயற்பாடுகள், கல்வி ஊக்குவிப்புச் செயற்பாடுகள் ஆகியனவற்றிற்கு நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரம் ரூபா பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் இவ்வாண்டுக்கான உதவியாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தாய்ச் சங்க நிர்வாகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த உதவிக்கான கோரிக்கை குறித்து அண்மையில் கூடிய சங்கத்தின் நிர்வாக சபை ஆராய்ந்து பின்னே குறிப்பிடப்பட்டுள்ளனவற்றிற்கான உதவியாகவே குறிப்பிட்ட தொகையினை வழங்கி உதவுவதெனத் தீர்மானிக்கப்பட்டு உதவித்தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொது மின்கட்டணம், இலத்திரனியல் நூலக மின் கட்டணம்
Wi-Fi இணையக் கட்டணம்
குடிநீர்க் கட்டணம்
விருந்தினர் உபசரணை
நூல் நிலைய உதவியாளருக்கான மேலதிகக் கொடுப்பனவு
க.பொ.த.(உயர்தரம்) பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களிற்கும் சாதனை மாணவர்களிற்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கல்
ஆசிரியர்தின விழா
பெண்கள் ஹொக்கி அணியின் விசேட பயிற்றுவிப்பாளருக்கான கொடுப்பனவும், அணி வீராங்கனைகளுக்கான காலணிகள் கொள்வனவும்
பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கான S.P. சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கல்
வாழ்வாதார வசதிகுறைந்த மாணவியின் கற்றல் செயற்பாட்டிற்கான உதவி
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முதற்கட்டமாக இருபது இலட்சம் ரூபாவினை நிரந்தர வைப்பிலிடும் திட்டச் செயற்பாடு விரைவில் நிறைவு செய்யப்பட்டதும் மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவசிய தேவைகளுக்கான உதவித் தொகை அடுத்த ஆண்டிலிருந்து இத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் என்பதுடன் இதன்மூலம் கல்லூரிச் சமூகம் எதிர்நோக்கி வந்த சவால்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டு நிர்வாகரீதியாக சுமுகமான நிலை உறுதிசெய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No Responses to “காரை.இந்துவிற்கு நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது!”