எமது கல்லூரியின் பழைய மாணவனும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும்,சமூக உணர்வாளருமாகிய திரு.வேலுப்பிள்ளை சிவநேசன் அவர்கள் இன்று 12-06-2019 புதன்கிழமை காரைநகரில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். திரு.சிவநேசன் அவர்கள் அண்மையில் அமரத்துவம் அடைந்த கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் பதில் அதிபரும், முன்னாள் உயர்தர பகுதித் தலைவரும், முன்னாள் மூத்த ஆசிரியையுமாகிய கலாநிதியின் கணவர் என்பதுடன் எமது தாய்ச் சங்கத்தின் செயலாளரான திரு.சுந்தரலிங்கம் அகிலன் அவர்களின் சிறிய தந்தையாரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
நிர்வாகம்,
யா/காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”