காரைநகர் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மத்தியில் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விழிப்புணர்வுச் செயற்பாடுகளின் வரிசையில் விசர்நாய்க்கடி நோய் தொடர்பிலான விழிப்பூட்டல் நிகழ்வு 13-06-2019 வியாழக்கிழமை முற்பகல் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம பேச்சாளராக கல்லூரியின் பழைய மாணவனும், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஓய்வுநிலை பணிப்பாளர் நாயகமுமான டாக்டர் ஆறுமுகம் சிவசோதி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கி விசர்நாய்க்கடி நோய் தொடர்பில் தெளிவூட்டியிருந்தார். விலங்கு விசர்நாய்க்கடி நோய் உலகின் பல நாடுகளில் வியாபித்துள்ள நோய் எனவும் இந்நோய் ஏற்பட்டால் நிச்சயமாக மரணம் சம்பவிக்கும் எனவும் இந்நோயால் உயிர் இழப்பவர்களில் 40% இற்கு மேற்பட்டவர்கள் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களாவர் என டாகடர் சிவசோதி குறிப்பிட்டார். இந் நோய்க்கு மருத்துவ சிகிச்சை கிடையாது எனவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்ற நாய்கள், பூனைகளுக்கு விசர்நாய்க்கடி நோய் தடுப்பூசி வழங்குவன் மூலம் மட்டுமே இந்நோயை ஒழிக்கமுடியும் எனவும் டாக்டர் சிவசோதி மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ‘வருமுன் காப்போம்’ என்ற நூல் விநியோகிக்கப்பட்டிருந்தது. பகுதித் தலைவரும், சிரேஷ்ட ஆசிரியருமான திரு.ச.அரவிந்தன் அவர்களின் நன்றியுரையுடன்; விழிப்பூட்டல் நிகழ்வு நிறைவு பெற்றது.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “விசர்நாய்க்கடி நோய் தொடர்பில் காரை.இந்துவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு”