காரை இந்துவின் புதல்வன் அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் இறைபதம் எய்தி ஓராண்டு உருண்டோடினாலும் காரை அன்னையின் மனதில் மறைந்தும் மறையாத உத்தமராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் மிகையாகாது.
இன்றைய பாடசாலைக் கல்வித் திட்டமானது தனித்து பாடவிதான செயற்பாடுகளோடு நின்றுவிடாது மாணவர்களின் தனியாள் ஆளுமை விருத்தியில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் இணைபாடவிதான செயற்பாடுகளிற்கு பெரிதும் முக்கியத்துவம் வழங்குகின்றது. அவ்வகையில் பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் நகர்த்திச் செல்வதில் பாடசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
‘தேசியகல்விக் கொள்கைக்கேற்ப சமூக உறவினூடாக பௌதிக,மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பத்தினூடாக தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஆளுமைமிக்க மாணவ சமூதாயத்தை உருவாக்கல்’ எனும் பாடசாலையின் பணிக் கூற்றினூடாகஇ’நவீன உலகில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆளுமைமிக்க மாணவ சமூதாயத்தை உருவாக்கல்’ எனும் தூர நோக்கை நோக்கி பாடசாலையை நகர்த்துவதற்கு எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வலுமிக்க சமூக அமைப்பாக தொழிற்படுகின்றது.
குறிப்பாக கனடாவாழ் கல்லூரியின் புதல்வர்களை ஒன்றுதிரட்டி 2012 ஆம் ஆண்டில் கனடாவில் பழைய மாணவர் சங்கக் கிளையை நிறுவி எம் கல்லூரியின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டவர் அமரர்சி.தம்பிராசா அவர்கள.அவர் கனடாக் கிளை ஆரம்பித்த நாளில் இருந்து தனது இறுதிக் காலம் வரை பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்குத் தலைமை வகித்து சிறந்தமுறையில் வழிநடத்திச் சென்றார்.
அவர் தலைமைத்துவத்திற்குரிய சிறந்த அணிகலன்களைக் கொண்டு விளங்கியமையால் அவரின் முன்மாதிரியை பின்பற்றி இன்னும் மென்மேலும் சிறப்புடன் செயற்பட்டுவருகின்றது. அமரா.;சின்னத்தம்பி தம்பிராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பணி தொடர வாழ்த்துவதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
திருமதி. வா.தவபாலன்
அதிபர்
யா/கலாநிதிஆ.தியாகராசா ம.ம.வி
காரைநகர்
No Responses to “மறைந்தும் மறையாத உத்தமர் – அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா”