கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளை
எமது நேச அமைப்புகளில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி சுவிற்சலாந்தில் கடந்த ஜுன் மாதம் வெளியிடப்பட்ட சிறப்பு மலரான ‘காரை நிலா’ நூலின் அறிமுக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.09.2014) அன்று எமது கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபை சார்பாக காரை நிலா நூலறிமுக விழாக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.
‘காரை நிலா’ மலராசிரியரும் எமது கல்லூரியின் பழைய மாணவியும் புகழ் பெற்ற நல்லாசிரியையும், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகருமாகிய செம்மொழிச் செல்வி பண்டிதை செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம் B.A. Dip.in.Edu. அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி விழாவை வழிநடத்தவிருக்கின்றார்.
‘ஆளுமை விருத்தியே அபிவிருத்தியின் அடிப்படை’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில் காரைநகரில் நூலக விருத்தி, நூல்பதிப்பு ஆகியவற்றில் தொண்டாற்றியோரும், காரை நிலா -2014 சிறப்பு மலர் மற்றும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற பண் இறுவெட்டு வடிவில் வெளிவர உழைத்தவர்களும் கௌரவிக்கப்பட இருப்பதுடன், இளையோரின் விளையாட்டுத் திறன் வளர்ச்சிக்காக காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்குதலும் நடைபெற உள்ளது.
நூல் வாசிப்புப் பழக்கத்தையம் காரைநகர் இளையோரின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்த மனம் கொண்டு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை சார்பாக காரை நிலா நூலறிமுக விழாக் குழுவினரினால் நடத்தப்படும் இவ்விழா காரை வாழ் மாணவர் பயன் பெறும் விழாவாகவும் காரை வரலாற்றில் பதியப்படும் வெற்றி விழாவாகவும் அமைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தாராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை வேண்டி கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளை
வாழ்த்துகின்றது.
காரை நிலா நூலறிமுக விழாவிற்கான அழைப்பிதழைக் கீழே காணலாம்.
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் நடத்தப்படும் ‘காரை நிலா’ நூல் அறிமுக விழா வெற்றி பெற வாழ்த்துகின்றோம்”