கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்கு தோற்றவுள்ள 55 மாணவர்கள் இரண்டாம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் இருபத்தைந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு S.P.S என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபல வர்த்தகர் அமரர் S.P.சுப்பிமணியம் நினைவாக ரொக்கப் பரிசில் வழங்கி பாராட்டப்பட்டிருந்தனர்.
அமரர் S.Pசுப்பிரமணியம் பாடசாலைக்கு அண்மையாக வர்த்தக நிலையம் ஒன்றினை நடத்தி வந்ததுடன் இங்கு பாடசாலை உபகரணங்களையும் விற்பனை செய்து வந்ததன் மூலம் காரைநகர் மக்கள் மத்தியில் பிரபல்யம்பெற்று அவர்களின் நன்மதிப்பினைப் பெற்று விளங்கியவர்.அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் மகன் திரு.அரிகரன் அவர்கள் தமது அன்புத் தந்தையாரை நினைவுகூர்ந்து ஊக்குவிப்பு பரிசிலை வழங்குவதற்கு இருபத்தையாயிரம் ரூபாவினை(ரூ25000.00) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஊடாக உதவியிருந்தார். திரு.அரிகரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் உறுப்பினர் என்பதுடன் அச்சங்கத்தின் செயற்பாடுகளிலும் மிகுந்த கரிசனையோடு பங்குகொண்டு ஊக்கிவித்து வருபவராகும்.
கல்லூரியிலிருந்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றவர்களுள் பல்கலைக்கழக அனுமதியை பெறவுள்ளவர்களிற்கு பகிர்ந்து உதவும் பொருட்டு ஐம்பதாயிரம் ரூபாவினை (ரூ50000.00) திரு.அரிகரன் தந்தையாரின் நினைவாக எற்கனவே உதவியிருந்தவர் என்பதும் இங்;கு குறிப்பிடத்தக்கதாகும்.பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டோரின் இறுதி விபரத்த்pனை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அது கிடைக்கப்பெற்றதும் இவ்வுதவுதொகை வழங்கப்படவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை; தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை இவ்விணயத்தளத்திற்கு தெரிவித்தார்.
அமரர் S.P. சுப்பிரமணியம் நினைவுப் பரிசில் வழங்க தெரிவுசெய்யப்பட்ட இருபத்தைந்து மாணவர்களிற்கும் பரிசில் வழங்கி பாராட்டும்; நிகழ்வு சென்ற 05-09-2014 வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற போது தீவக வலய தமிழ் மொழிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராசா அவர்களும் விடுமுறையில் சென்றுள்ள பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவிப் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கிவிப்பு பரிசிலை மாணவர்களிற்கு வழங்கியிருந்தனர். இவர்களுடன் கல்லூரியின் முதுநிலை பிரிவுத் தலைவர் திரு. தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களும் இடைநிலைப் பிரிவுத் தலைவர் திரு.யோ.கேதீஸ்வரன் அவர்களும் பரிசிலை வழங்கியிருந்தனர்.
பரீட்சைக்கு தோற்றிய பாடங்களுள் குறைந்தது ஒருபாடத்திலும் மேற்பட்டபாடங்களிலும் 75 மதிப்பெண்களிற்கு மேல்; பெற்றவர்கள் இவ் ஊக்கிவிப்பு பரிசில் பெற தெரிவு செய்யப்பட்டதுடன் ஒரு பாடத்திற்கு 250 ரூபா என்ற அடிப்படையில் குறித்த மதிப்பெண்களிற்கு மேல் பெற்ற பாடங்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசில்தொகை கணிக்கப்பட்டு இருபத்தையாயிரம் ரூபாவும் 25 மாணவர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஊக்கிவிப்பு பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோரும் டிசம்பரில் நடைபெறவள்ள இறுதிப் பரீ;ட்சைக்கு தோற்றவுள்ள ஏனைய மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
ஊக்குவிப்பு பரிசிலை தமது தந்தையார் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பழைய மாணவர் சங்க கனடா கிளை ஊடாக வழங்கி உதவிய திரு.அரிகரன் அவர்களிற்கும் இந்நிதியினை பெற்றுக்கொண்டு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆதரவளித்து ஒத்துழைத்த பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகத்திற்கும் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.
No Responses to “இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்ற க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S. நினைவாக ஊக்கிவிப்பு பரிசில் வழங்கி பாராட்டப்பட்டனர்.”