ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரம் இடைநிலைப்பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு இப்பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தில் இவ் ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக்கொண்ட கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ள இவ் ஆய்வுகூடம் கல்லூரி வளாகத்தின் வடக்குப் பகுதியின் மேற்குத்தசையில்(சயம்பு வீதிப்பக்கமாக அமைந்துள்ளது.
இவ் ஆய்வு கூடத்திற்கு தேவையான கணணிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இவ் ஆய்வுகூடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு விடப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
No Responses to “மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அவர்களால் ஒக்டோபர் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது”