கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வடக்குப்புறமாக அமைந்துள்ள முற்றப்பகுதி அழகிய பூமரங்கள் நிழல்தரு மரங்கள் என்பன நாட்டப்பட்டு இயற்கை எழில் நிறைந்த பகுதியாக மாற்றி அமைக்கப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.
இயற்கையின் வரங்களான மரங்களையும், மலர் செடிகளையும் நாட்டி இதயத்தை இதமாக்கும் தோட்டக்கலை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில்(2015) கல்வி பயிலும் மாணவர்களின்
சுற்றாடல் முன்னோடிக்குழு (Environmental Club) மதர் சிறீலங்கா (Mother Sri Lanka) ஆகிய செயற் திட்டங்கள் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்கான பூமரங்களை நடுவதற்கான பாத்திகளை அகழ்வதற்கும் மண்பண்படுத்துவதற்கும் கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்பு பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான திரு.சி.நேசேந்திரம் அவர்கள் பெக்கோ பொறியை இலவசமாக வழங்கி ருபா50000 மதிப்புள்ள வேலைக்கு அநுசரணையை வழங்கி உதவினார்.
செயல் திட்டத்திற்கான பூமரங்களும் நிழல்தரு மரங்களும் SDMG ( School Development Management Group) நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டது.
கடினமான வேலைகளை செய்வதற்கும் பசளைமண் கொள்வனவிற்கும் பழைய மாணவர் சங்கநிதி பயன்படுத்தப்பட்டது. 125ம் ஆண்டு நிகழ்வின் போது ஊரி கிராம சேவையாளர் பிரிவு பெற்றோர்களால் 25 பூச்சாடிகளும், மாணவர்கள் அதிகமாக உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து 22ம் ஆக மொத்தம் 47 பூச்சாடிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
க.பொ.த உயர்தர 2015 வருட மாணவர்களினது பூந்தோட்டம் அமைக்கும்செயற்திட்டங்களுக்கு செயற்திட்ட பொறுப்பாசிரியர்களும் பாடங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும் வழிகாட்டி செயற்திட்டம் நிறைவு பெற பணியாற்றியிருந்தார்கள்.
தொடர்பு பட்ட செய்தி
பாடசாலை வளாகத்தை அழகுபடுத்துதல் பூமரங்கள் நிழல் தரும் மரங்கள் நாட்டல்
http://www.karaihinducanada.com/view_all_news.php?id=137
இத்திட்ட வேலைகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பாடசாலையின் வடக்கு பகுதி பூமரங்கள், நிழல்தரு மரங்கள் நாட்டப்பட்டு இயற்கை அழகு மிக்கதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”