கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆசிரிய தின விழாவும் கலைவிழாவும் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை (06.10.2014) காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் பண்டிதர் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.சிறிவிக்கினேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
உலக ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆசிரியர்களைப் வாழ்த்தி வணங்கி நன்றி கூறும் விழாவாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடகி உள்ளன.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆசிரிய தின விழாவிற்கான நிதி அனுசரணையை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், நலன் விரும்பிகள் அனைவரையும் விழா ஏற்பாட்டாளர்களான உயர்தர மாணவர் மன்றத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
விழா அழைப்பிதழைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் ஆசிரிய தின விழாவும் கலைவிழாவும்”