காரை.இந்துவின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 04.07.2019 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருமாகிய திரு வேலுப்பிள்ளை தவராசா (SLAS) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்) திருமதி நிறைஜா மயூரதாஸன் (SLEAS) அவர்களும், கௌரவ விருந்தினராகவும் நிறுவுனர் நினைவுப் பேருரையும் ஆற்றுபவராக பாடசாலையின் பழைய மாணவியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத் துறை, ஆங்கில இலக்கிய முதுநிலை விரிவுரையாளருமாகிய கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டிருந்தமை மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவிருந்தது.
மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் இந்நிதியத்தின் அநுசரணையில் நடைபெற்ற ஐந்தாவது பரிசளிப்பு விழா இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக
• தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான பொதுத் தகைமைத்திறன் விருதுகள்
• ஆங்கிலத் துறைசார் தேர்ச்சிக்கான விருதினை செல்வி தே. கம்சிகா பெற்றுக்கொண்டார்.
• நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சுவரொட்டிப் போட்டியில் 3ம் இடத்தினைப் பெற்றமைக்கான விருதினை செல்வன் வி. கஜரூபன் பெற்றுக்கொண்டார்.
• அகில இலங்கை பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 1ம் இடத்தினைப் பெற்றமைக்கான விருதினை செல்வன் அ. ஜஸ்ரின்ராஜ் பெற்றுக்கொண்டார்.
• அகில இலங்கை பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டியில் சிரேஸ்ட பிரிவில் 1ம் இடத்தினைப் பெற்றமைக்கான விருதினை செல்வன் பு. கஜீபன் பெற்றுக்கொண்டார்.
• அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டி மாகாண மட்டத்தில் குழு இசைப் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்றமைக்கான விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொண்டார்.
செல்வி ஆ. அமிர்தா
செல்வி ச. தாரணி
செல்வி கி. சர்மிளா
செல்வி கி. பிரியா
செல்வி சி. புருசோத்தமி
செல்வி யோ. அஸ்மிலா
செல்வன் சி. சர்வேஸ்வரன்
செல்வி யோ. டிலக்சனா
செல்வி அ. ரோஸ்மிலா
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் குழு இசை 1 இல் பங்குபற்றி 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெறுகின்றனர்.
செல்வன் ஆ. அரிகரன்
செல்வி ஜெ. சரண்யா
செல்வி ச. ஜெனிதா
செல்வி கி. அனுஜா
செல்வி கி. அபிராமி
செல்வி செ. மயூரிகா
செல்வி ஆ. ஜதுசா
செல்வி கு. வைஸ்ணவி
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் குழு இசை 2 இல் பங்குபற்றி 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெறுகின்றனர்.
செல்வி யோ. அபிதா
செல்வி யோ. அஸ்மிலா
செல்வி ஏ. சுவஸ்திகா
செல்வி தி. ஆதிரை
செல்வன் சி. சர்வேஸ்வரன்
செல்வி கி. லக்சனா
செல்வி சி. புருசோத்தமி
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் குழு இசை 3 இல் பங்குபற்றி 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெறுகின்றனர்.
செல்வி ஆ. அமிர்தா
செல்வி அ. ரோஸ்மிலா
செல்வி லோ. டிலக்சனா
செல்வி கி. பிரியா
செல்வி கி. சர்மிளா
செல்வி ச. தாரணி
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் தனி இசையில் பங்குபற்றி 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி ஜெ. சரண்யா விருதினைப் பெறுகின்றார்.
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் தனி இசையில் பங்குபற்றி 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி கி. அனுஜா விருதினைப் பெறுகின்றார்.
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் போட்டியில் தனி இசையில் பங்குபற்றி 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி ஆ. அமிர்தா விருதினைப் பெறுகின்றார்.
• சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்திய தியாகத் திறன் நாடகப் போட்டியில் பங்குபற்றி 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பின்வரும் மாணவர்கள் விருதினைப் பெற்றுக்கொள்கின்றனர்.
செல்வி ஆ. அமிர்தா
செல்வன் ர. சயுவண்ணன்
செல்வி தே. டென்சிகா
செல்வி ச. ஜனனிகா
செல்வன் தி. ஆதவன்
செல்வி க. றனுசியா
செல்வன் க. சான்றோ
செல்வன் த. சுகிர்தன்
செல்வன் கா. மயூரன்
2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்கள்
1. ர. சயுவண்ணன் 6A. 3C
2. பே. தமிழினி 5A, B, 2C, S.
3. ம. டர்சிகா 4A, 3C, S.
4. சி. அறிவரசன் 3A, 3B, 2C.
5. தி. லுகிர்தன் 3A, 3B, 2C.
6. ஏ. துஸ்யந்தன் 3A, 4B, C, S.
7. வ. நிலா 3A, 2B, 3C, S.
8. வ. பவீனா 3A, B, 3C, S.
9. சி. புருசோத்தமி 3A, C, 3S
2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்கள்
1. இ. லக்சிகா 3C, வர்த்தகத்துறை
2. அ. எஸ்தர் A, C, S, கலைத்துறை
3. தெ. ஜனஜா A, B, C, கலைத்துறை
4. கி. பிரியா 2B, C, கலைத்துறை
5. சு. சிந்துஜா B, C, S, கலைத்துறை
6. க. தமிழினி A, C, S, கலைத்துறை
7. க. அபிராமி A, 2C, கலைத்துறை
8. சி. கிருஸ்ணா A, 2B, தொழில்நுட்பத்துறை
9. சோ. பிறையாளன் B, C, S, தொழில்நுட்பத்துறை
10. ச. சஜீவன் 2B, C தொழில்நுட்பத்துறை
11. சி. தூயவன் B, 2C, தொழில்நுட்பத்துறை
12. க. கஜந்தன் B, 2C, தொழில்நுட்பத்துறை
13. க. வசந்தரூபன் C, 2S, விஞ்ஞானத்துறை
2018 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
1. செல்வன் தர்மலிங்கம் நாகரஞ்சன் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
2. செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன் – தென்கிழக்கு பல்கலைக்கழகம்
3. செல்வி டர்மிதா யோகநாதன் – கொழும்பு பல்கலைக்கழகம்
4. செல்வி சரண்யா பேரின்பநாயகம் – யாழ்ப்பாணப் பல்;கலைக்கழகம்.
5. செல்வி யுசிதா யோகரத்தினம் – கிழக்கு பல்கலைக்கழகம்.
2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவி
1. செல்வி சாந்தினி கனகலிங்கம்
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கிய ஞாபகார்த்தப் பரிசில்கள்
அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவரும் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு(A சித்தி) பெற்ற பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
1 செல்வன் ர. சயுவண்ணன்
2 செல்வி ம. டர்சிகா
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் திரு வே. நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு(A சித்தி) பெற்ற மாணவன் செல்வன் சி. அறிவரசன் பெற்றுக்கொள்கின்றார்.
திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியர் பொன்னம்பலவாணர் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு(A சித்தி) பெற்ற மாணவி செல்வி வ. நிலா பெற்றுக்கொள்கின்றார்.
அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு
திரு.சுப்பிரமணியம் சச்சிதானந்தன் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் தம்பதியினரால் அவர்களின் அன்புக்குரிய தாயாரும் மாமியாருமாகிய அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018ம் ஆண்டு க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புச் சித்தி (யு)பெற்ற பின்வரும் நான்கு மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
• செல்வி யோ. அஸ்மிலா
• செல்வி ம. கஜானி
• செல்வி சி. புருசோத்தமி
• செல்வி பே. தமிழினி
அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசு
திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரியதந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டின்
• சிறந்த மெய்வல்லுநர் வீரனுக்கான விருதினை செல்வன் கா. மயூரன் பெற்றுக்கொள்கின்றார்.
• சிறந்த மெய்வல்லுனநர் வீராங்கனைக்கான விருதினை செல்வி க. கோகிலதர்சா பெற்றுக்கொள்கின்றார்.
அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு
திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவனுக்கான விருதினை பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
1. செல்வன் க. கமலரூபன்
2. செல்வி த. குபேரதா
அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் ஞாபகார்த்தப் பரிசு.
திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களால் மறைந்த தனது அன்புக்குரிய தந்தை அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்பத் துறையில் திறமைச் சித்திகளை பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் பின்வரும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
• செல்வன் சி. கிருஸ்ணா– உயிரியல் தொழில்நுட்பம்
• செல்வன் ச. சஜீபன் – பொறியியல் தொழில்நுட்பம்
அமரர் ஆர். கந்தையா மாஸ்ரர் ஞாபகார்த்தப் பரிசு
திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் ஆர். கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசினை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான விருதினை பின்வரும் ஐந்து ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
1. திருமதி அற்புதமலர் இராசசிவம்
2. திருமதி றஜிதா பாலகாசன்
3. திருமதி விஜயலட்சுமி றமணன்
4. திருமதி பேர்லின் சைலா சந்திரதாசன்
5. திருமதி சிவாஜினி லக்ஸ்மன்
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களும், இசைத்துறை ஆசிரியர்களும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்கள். மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு ச. அரவிந்தன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
இந்நிகழ்வின் புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அநுசரணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்.”