கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வடக்கு பகுதியின் பிரதான நுழை வாசலும் உட்புற நாற்சார் முற்றப் பகுதியும் சுற்றிவர கொங்கிறீற்றிலான வர்ண அலங்கார வளைவுகள் அமைத்தும், வளைவுகளின் உள்ளே அழகிய பூமரங்கள், நிழல்தரு மரங்கள் நாட்டியும் எழில் மிகு தோற்றம் மிக்கதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பெயர்ப் பலகை, பிரதான நுழை வாசல் பகுதியின் இருமருங்கிலும் உள்ள மதில்கள், மற்றும் பாடசாலையின் வடபகுதியில் அமைந்துள்ள வகுப்பறைக் கட்டிடஙக்களும் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கல்வித்திணைக்களம், பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, நலன் விரும்பிகள், நன்கொடையாளர்களின் உதவியுடன் பாடசாலையின் வடக்கு பகுதி எழில்மிகு தோற்றம் கொண்டதாக துரித கதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கப் பெற்ற பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பாடசாலையின் வடக்கு பகுதியின் புதிய எழில்மிகு தோற்றம்”