வடமாகாண மட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. சி. புருசோத்தமி மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி.சி.புருசோத்தமி அவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன் ஆகியோரையும் பாடசாலை சமூகமும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
வாய்ப்பாட்டு இசை உலகில் பல புகழ்பெற்ற கலைஞர்களின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டு; வருகின்ற பாரம்பரியத்தினை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற இப்பாடசாலையிலிருந்து சென்ற மாணவி செல்வி புருஷோத்தமி மாகாணத்திலலுள்ள பிரபல்யம் மிக்க பாடசாலைகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தினை தட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றி பெற்ற மாணவி செல்வி. சி.புருசோத்தமியின் படத்தைக் காணலாம்
No Responses to “மாகாண மட்ட பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்ற செல்வி.சி.புருசோத்தமி”