பாடசாலையின் வடக்கு வளாகத்தின் வடக்கு கிழக்கு பகுதியின் எல்லைகள் இரண்டும் வேலிகளற்ற நிலையில் பாதுகாப்பற்ற தன்மை இருந்து வந்ததுடன் அண்மையில் பாடசாலை முற்றத்தில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம் கட்டாக்காலி கால்நடைகளினால் பாதிப்படையக்கூடிய நிலை இருந்து வந்தது.
தற்போது 270 அடி நீளமான இவ்வெல்லைகள் இரண்டும் கம்பி வலையிலான(Wire Mesh) வேலிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன் கால்நடைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பும் நீக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வேலியினை அமைப்பதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஒரு இலட்சம் ரூபாவினை தாய்ச் சங்க நிர்வாகத்தினூடாக உதவியிருந்தமை குறித்து பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் கனடா கிளை நிர்வாகத்திற்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.
வேலி அமைப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள்
No Responses to “பாடசாலையின் வடக்கு வளாக எல்லை வேலிகள் அமைப்பதற்கு பழைய மாணவர் சங்க கனடா கிளை ஒரு இலட்சம் ரூபா உதவி”