காரை.இந்துவில் பாடசாலை மட்டத்திலான வணிக தின விழா 2019.07.09 அன்று காலை 7.30 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் வணிக மன்றத் தலைவர் செல்வி ச. தாரணி தலைமையில் நடைபெற்றிருந்தது. இறைவணக்கம், செல்வன் ப.துவாரகனின் வரவேற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து செல்வி ச. தாரணியால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டிருந்தது. அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தனதுரையில் வணிகபாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வணிகமும் கணக்கீட்டுக் கல்வியை தரம்10, தரம்11 ஆகியவற்றில்; கற்பதால் மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறியதுடன் இடைநிலைப் பிரிவில் வணிக பாடத்திற்குரிய அடிப்படை அறிவு, செய்முறைத் தொழிநுட்பப் பாடத்தினூடாக வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வணிகப் பிரிவு ஆசிரியை திருமதி ப. அமுதசிங்கம் அவர்கள் வணிக பாடம் கற்பதால் ஏற்படும் அனுகூலங்களையும், உயர் கற்கைகள் பற்றியும் குறித்து தெளிவான விளக்கத்தினை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பேச்சு – செல்வி தனுசியா, தரம் 11 மாணவர்களின் வினாடி வினாப் போட்டி, பொது அறிவு – செல்வி ஜிவிசா ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வணிக தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இறுதியாக செல்வன் துவாரகன் நிகழ்வினை பயனுள்ளவகையில் அமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இவ் வணிக தின நிகழ்வானது மாணவர்களது பாடரீதியான அடைவு மட்டத்தினையும், அனுபவத்தினையும் மேம்படுத்தவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கும் உந்து சக்தியாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற வணிக தின விழா”