பாடசாலை வடக்கு பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டிடத் தொகுதி அகற்றப்பட்டதனால் வந்திருந்த மரங்கள், சட்டங்கள், கற்கள் என்பன வளாகப்பகுதியில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு இருந்தன. தற்போது இவை அனைத்தும் அகற்றப்பட்டு வளாகம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஆண்கள் மலசல கூடத்தின் குழியில் நிரம்பப்பெற்ற கழிவு குழியிலிருந்து கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு குழி சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
மேற் குறித்த இரு பணிகளும் நிறைவுசெய்யப்படுவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை முப்பதினாயிரம் ரூபாவை (ரூ30,000.00) உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலையின் வடக்கு பகுதி துப்பரவு செய்யப்படமுன் எடுத்த படம்
பாடசாலையின் வடக்கு பகுதி துப்பரவு செய்யப்பட்டபின் எடுத்த படம்
No Responses to “பாடசாலையின் சுத்தம், சுகாதாரம் தொடர்பிலான பணிகள் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன”