சென்ற 11-09-2019 ஞாயிற்றுக்கிழமை சைவ மகாசபை மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக் கூட்டத்தின்போது காரை.இந்துவின் பழைய மாணவனான திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் மக்களால் “பாங்கர்” (Banker) என அறியப்பட்ட சிவசுப்பிரமணியம் அவர்கள் தாம் கற்ற பாடசாலையான காரை.இந்து மீது மிகுந்த விசுவாசம் கொண்டவராக இக்கல்லூரிக்கு மட்டுமல்லாது காரைநகரின் பொதுப் பணிகளிற்கும், ஆலயத் திருப்பணிகளிற்கும் உதவி வருபவர். புலம்பெயர்ந்த காரை.அமைப்புக்களின் உதவியுடன் இடப்பெயர்வினால் சிதைவுற்ற காரைநகரை மீளக்கட்டியெழுப்புகின்ற பெரும் பணியினை முன்னெடுத்து வருகின்ற காரை.அபிவிருத்திச் சபையின் தலைவராக திரு. சிவசுப்பிரமணியம் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பெரிமிதமடைவதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
No Responses to “காரை.அபிவிருத்திச் சபையின் தலைவராக தெரிவான காரை.இந்துவின் பழைய மாணவன் சிவசுப்பிரமணியம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”