கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ மாணவர்களுக்கான கருத்தரங்கு கடந்த 02.12.2014 அன்று பாடசாலையின் உயிரியல் ஆய்வு கூடத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலர் திருமதி.ஏ.கல்யாணி அவர்கள் மாணவர்களுக்கான சுற்றாடல் கல்வி, சுற்றாடலைப் பாதுகாப்பது என்பன தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகம் சுற்றாடல் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ‘சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்’ என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’க்களை அமைத்து சுற்றாடலைப் பாதுகாப்பாது தொடர்பான விழிப்பூட்டலை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில், 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில் 25 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ குறுகிய காலத்தில் மஞ்சள் வர்ணப் பதக்கத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதோடு உலக சுற்றாடல் தினம், மரம் நடுகை போன்ற சுற்றாடலைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் ஆகியோர் சிறப்பாக வழிநடத்திவருகின்றனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தினைக் கீழே காணலாம்.
No Responses to “பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக் குழுவிற்கான கருத்தரங்கு”