காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 35 மாணவர்களும் 4 பொறுப்பாசிரியர்களும் சின்மயா மிசன் ஆச்சிரமத்திற்குச் சென்று அங்கு சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டுவிட்டு வீதியுலா சென்ற சுப்பிரமணிய சுவாமியின் பின்னே சின்மயா மிசன் சுவாமிகளுடன் இணைந்து பஜனைப் பாடல்களைப் பாடிச் சென்றனர். சுப்பரமணியசுவாமி இருப்பிடத்தை அடைந்ததும் கோயிலின் முன் வீதியில் யோகர்சுவாமிகளின் நற்சிந்தனைக் கீதத்தை இசைத்து பஜனை நிகழ்வை நிறைவுசெய்தனர். மாணவர்களும், பொறுப்பாசிரியர்களும் அன்னதான நிகழ்விலும் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சின்மயாமிசன் ஆச்சிரமத்திற்குச் சென்று சுவாமிகளால் நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தைச் செவிமடுத்ததுடன் சின்மயா மிசன் சுவாமிகளால் வினவப்பட்ட வினாக்களிற்கு விடையளித்து வழங்கப்பட்ட சின்மயநாத இதழ்களை பரிசாகப் பெற்றுக்கொண்டனர்.
நல்லூர் ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு ஆலய சுற்றாடலில் பல்வேறு அமைப்புக்களினாலும் ஆன்மீகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சின்மயா மிசன் சுவாமிகளுடன் இணைந்து மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை கீழே காணலாம்:
No Responses to “நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பஜனை நிகழ்வில் இணைந்து கொண்ட காரை.இந்துவின் மாணவர்கள்.”