கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பல்வேறு அணிகளைச் சோந்;த அறுபது மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் சென்ற 02.12.2014 அன்று நடைபெற்றது.
மாணவர்களின் தேர்ச்சி மேம்பாட்டு செயற்றிட்டங்களில் ஒன்றாக தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்குகள் (Student Based High Order Process – SBHOP) என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி பாடசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு; நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கருத்தரங்கில், DFCC வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு.சரவணபவான் ரவீந்திரா அவர்களும் ஓய்வு பெற்ற தீவக கல்விப் பணிப்பாளர் திரு.G.V.ராதாகிருஸ்ணன் அவர்களும் வளவாளராகக் கலந்து கொண்டு மேற்படி தலைமைத்துவப் பயிற்சியினை வழங்கினார்கள்.
DFCC வங்கியின் சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி சேவையினை DFCC வங்கி வளவாளர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சிப் பட்டறையில் கல்லூரியின் இடைநிலை, உயர்நிலை வகுப்புகளில் பயிலும் சாரணர் இயக்க பெண்கள், ஆண்கள் அணியினர், மாணவ முதல்வர்கள், சுற்றாடல் முன்னோடிக் குழு அகியனவற்றைச் சேர்ந்த சேர்ந்த 60 மாணவர்கள் பங்குபற்றி பயன்பெற்றனர்.
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளின் போது மாணவர்களிடம் உயர் மட்டத்திலான திறன்களை விருத்தி செய்ய அவசியமான திட்டங்களில் ஒன்றான தலைமைத்துவப் பயிற்சித்திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் பொருத்தமான முறையில் அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No Responses to “மாணவர் தகமைத்திறன் விருத்தி நோக்கிய தலைமைத்துவக் கருத்தரங்கு”