காரைநகர் என்கின்ற பழம்பெரும் கிராமத்தின் சமூகம் பொருளாதாரம் சமயம் கல்வி ஆகிய துறைகளில் கிராம மக்கள் உருவாக்கிய்; பொது அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானதாக அமைந்து விளங்குகின்றது.
1991ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வானது இக்கிராமத்தின் வளங்களை அழித்து அதன் வளர்ச்சியினை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டிருந்தமை துரதிஷ்டவசமானதாகும்.. அழிந்த வளங்களை மீளவும் ஏற்படுத்தி காரைநகரை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்கின்ற முயற்சியில்; புலம்பெயர்ந்திருந்தும் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உணர்வோடு;; ஒன்றுபட்ட மக்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கள் ஆற்றிவரும் பங்கு அளப்பரியதாகும்.
அந்தவகையில் பிரித்தானியா வாழ் காரை மக்களினால் 24 ஆண்டுகளிற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் வரலாற்றுப் பதிவுகளாக அமைந்த பல முக்கிய பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வெள்ளி விழா ஆண்டிலே பாதம் பதிக்க்pன்ற காலகட்டத்தில் திரு.சிவசுப்பிரமணியம் கோணேசலிங்கம் தலைமையில் திரு.சோமசுந்தரம் சிவபாதசுந்தரத்தை; செயலாளராகவும் திரு.பாலசுப்பிரமணியம் கஜேந்திரனை; பொருளாளராகவும் உள்ளடக்கிய நிர்வாகம் அமைந்திருப்பது சிறப்பானதாகும். கடந்த காலங்களில் இச்சங்கத்தில் பதவி வகித்து ஊர்ப்பற்றுடனும்; அர்ப்பணிப்புடனும் சேவையாற்றிய நிர்வாகிகளையும் இச்சந்தாப்பத்தில் நினைவுகூர்ந்து அவர்களைப் பாராட்டி நன்றி கூறுவதுடன் அமையப்பெற்றுள்ள புதிய நிர்வாகம் செயற்திறனுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு காரை உறவுகளின் பல நலன்புரித் திட்டங்களை நிறைவுசெய்யும் என நம்புகின்ற அதேவேளை; நிர்வாகத்தின் பணிகள் மேன்மையுற்று விளங்க கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நெஞ்சார வாழ்த்துகின்றது.;
எமது நேச அமைப்புக்க்ளில் ஒன்றான தங்களது ;சங்கத்திற்கும் எமது கிளை அமைப்பிற்கும் இடையே நல்லெண்ணத்துடனான தொடர்பு சென்ற நிர்வாகத்தில் இருந்தது போல தொடர்ந்து நீடித்து நிலைக்க ஒத்துழைப்பதுடன்; பாடசாலை சார்ந்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும்; தங்களது நிர்வாகம்; சாத்தியமான ஒத்துழைப்பினை வழங்கி உதவும்; என எதிர்பார்க்கின்றோம்..
மு.வேலாயுதபிள்ளை கனக சிவகுமாரன்
தலைவர் செயலாளர்
முழுமையான வாழ்த்துச் செய்தியை இங்கே காணலாம்
No Responses to “பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக சபையின் பணிகள் மேன்மையுற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது!”