வனஜீவராசிகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் வில்பத்து தேசிய பூங்காவை பார்வையிடுவதற்கான களப் பயணம் ஒன்று ஆகஸ்டு மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்களப் பயணத்தில் வட மாகாணத்திலிருந்து காரை.இந்து உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர். காரை.இந்துவிலிருந்து ஒன்பது மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் கலந்துகொண்டு தேசியப் பூங்காவை பார்வையிட்டிருந்தனர். பலவகைப்பட்ட மிருகங்களையும் பறவைகளையும் காட்டுச் சூழலில் பார்வையிட்ட இவர்களால் மாலை 4.00 மணிக்கே காடு இருட்டிவிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இக்களப் பயணமானது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததுடன் ஓர் புதிய ஆனுபவமுமாக அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
இப்பயணத்தின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “காரை.இந்துவின் மாணவர்கள் வில்பத்து தேசியப் பூங்காவைப் பார்வையிட்டனர்.”