அனைத்துப் பாடசாலைகளிலும் வாரத்தில் ஒரு நாளை ஆங்கில மொழித் தினமாகக் கடைப்பிடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெரிவித்துள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
மாணவர்கள் ஆங்கிலமொழியில் பேசுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்த்து சரளமாகப் பேசக்கூடிய நிலையினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவே வாரத்தில் ஒரு நாளை ஆங்கிலமொழித் தினமாகக் கடைப்பிடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஆங்கிலமொழித் தினத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஆங்கிமொழியில் மட்டுமே கலந்துரையாடவேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகள் மாணவர்களுக்கு பரீட்சயமாக வருவதுடன் அவர்கள் ஆங்கிலத்தை சரளமாகப் பேசமுடியும் எனவும் நம்பப்படுகிறது.
இரண்டாம் தவணை விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது ஆங்கிலமொழித் தினம் குறித்த சுற்றுநிருபம் கிடைக்கப்பெற்று குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No Responses to “வாரத்தில் ஒரு நாளை ஆங்கிலமொழித் தினமாகக் கடைப்பிடிக்க கல்வி அமைச்சு தீர்மானம்.”