கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் சி.சிவராமலிங்கம் அவர்கள் தனிப்பட்ட பயணத்தினை மேற்கொண்டு தாயகம் சென்றிருந்த சமயம் இன்று புதன்கிழமை (04-09-2019) காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்று கல்லூரியைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களுடன் கல்லூரியின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொத.சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட மீட்டல் பயிற்சி வகுப்புக்களை கனடா-காரை கலாசார மன்றத்தின் அநுசரணையில் நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை அதிபருக்குத் தெரியப்படுத்தி அவை குறித்து விசேடமாக இருவரும் பேசியிருந்தனர். திரு.சிவராமலிங்கத்தின் அதிபருடனான கலந்துரையாடலின்போது கல்லூரியின் உப-அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் அவர்களும் உடனிருந்தார்.
இரு ஆண்டுகளிற்கு மேற்பட்ட காலத்திற்குப் பின்னர் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் ஒருவர் கல்லூரிக்குப் பயணம் செய்திருந்தமையானது கல்லூரி மீதான தற்போதய நிர்வாகத்தின் அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளை திரு.சிவராமலிங்கம் தலைமையிலான கனடா-காரை கலாசார மன்றத்தின் தற்போதய நிர்வாகமானது பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நிலைப்பாட்டினை நன்கு புரிந்துகொண்டு மன்றத்தின் முன்னைய நிர்வாகத்தின் காலத்தில் விரிசலடைந்திருந்த நல்லுறவை மீண்டும் பேணுவதில் ஆர்வம்கொண்டு செயலாற்றிவருவது காரைநகர் அபிமானிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
திரு.சிவராமலிங்கம் அவர்கள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், உப-அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் சிவராமலிங்கம் அவர்களின் காரை.இந்துவிற்கான பயணம்.”