பாலாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது வெள்ளவத்தை, கொழும்பில் வசித்து வந்தவரும் பிரபல வர்த்தகரும் (A.S.சங்கரப்பிள்ளை வர்த்தக நிறுவனம்) காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.A.S.S.இராசரத்தினம் அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
சமய, சமூக உணர்வாளரான திரு.இராசரத்தினம் அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் பொருளாளராகவும், தீவிர செயற்பாட்டு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியிருந்தவர். இதேவேளை கொழும்பில் செயலாற்றிவந்த காரை.அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்து ஊர்ப்பணியில் ஈடுபட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
நிர்வாகம், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”