‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஜனாதிபதி விசேட செயற் திட்டத்தின் ஓர் அங்கமாக டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுப்பதுற்கு சூழல் துப்பரவாக வைத்திருக்கப்படல்வேண்டும் என்கின்ற தெளிவினை தோற்றுவிக்கும் வகையிலான இத்திட்டத்தின் கீழ் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தினை சிரமதானம் மூலமாக துப்பரவு செய்கின்ற பணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கல்லூரியின் உப-அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் தலைமையில் 28-08-2019அன்று காலை 8.00மணியளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த இச்சிரமதானப் பணியின்போது பிரதேசச் செயலகத்தில் பணியாற்றுகின்ற குறிப்பிட்ட திட்டத்திற்குப் பொறுப்பான அலுவலர்களும் சமூகமளித்து பார்வையிட்டிருந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.;
இச்சிரமதான நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “ஜனாதிபதியின் விசேட செயற் திட்டத்தின் கீழ் காரை.இந்துவில் முன்னெடுக்கப்பட்டிருந்த சிரமதானப் பணி”