யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபரான திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டிருந்த சிறந்த அதிபருக்கான தெரிவில் சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டு ‘குரு பிரதீபா பிரபா‘ என்னும் உயரிய விருதினைப் பெற்றுக் கொள்வதற்கான தகமையைப் பெற்றுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் 04-10-2019 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் திரு.அகிலவிராஜ் காரியவாசம் அவர்களினால் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் ‘குரு பிரதீபா பிரபா’ விருது’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், பழைய மாணவியுமாகிய திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் சிறந்த அதிபருக்கான இவ்விருதினைப் பெறுவதன் மூலம் காரை.இந்துவிற்கு புகழ் சேர்த்துள்ளமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிக்க பெருமிதம் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது. காரை.இந்துவின் இரண்டாவது பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் தாம் இக்கல்லூரியில் பணியாற்றிய மூன்று ஆண்டுகளிலும் நிர்வாகத் திறனும் ஆளுமையும் மிக்க அதிபர் என்பதை நிரூபித்துச் சென்றவர்;.
ஆசிரியராகவும,; உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய பின்னர்; அதிபராக பதவி வகித்து சமூகத்திற்கான தனது சிறப்பான கல்விச் சேவையினைத் தொடரும் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் களபூமி, பாலாவோடையைப் பிறப்பிடமாக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “சிறந்த அதிபருக்கான விருதினைப் பெறும் யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலனை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”