கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் S.P.S என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபல வர்த்தகர் அமரர் S.P..சுப்பிமணியம் அவர்கள் நினைவாக பணப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் மகன் திரு.அரிகரன் அவர்கள் தமது அன்புத் தந்தையாரை நினைவுகூர்ந்து ஊக்குவிப்பு பரிசிலை வழங்குவதற்கு அறுபதினாயிரம் ரூபாவினை(ரூ60,000.00) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஊடாக உதவியிருந்தார்.
கல்லூரியிலிருந்து கடந்த டிசம்பர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றிய 55 மாணவர்களில் இரண்டாம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருபத்தையாயிரம் ரூபாவினை (ரூ25000.00) திரு.அரிகரன் தந்தையாரின் நினைவாக எற்கனவே உதவியிருந்தவர் என்பதும் இங்;கு குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் S.P.சுப்பிரமணியம் நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10.02.2015) அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராகவும், கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக சபை உறுப்பினருமாகிய திரு.த.அம்பிகைபாகன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
No Responses to “பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களுக்கும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக கௌரவப் பரிசில்”