காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆங்கில தின விழாவும் ‘BLOSSOM’சஞ்சிகையின் வெளியீடும் சென்ற 14-11-2019 வியாழக்கிழமை 11.00மணிக்கு கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.யோகலிங்கம் பிரதம விருந்தினராகவும் ஆங்கில மொழிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.பத்மராஜா சிறப்பு விருந்தினராகவும் ஆங்கில மொழிக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.எஸ்கிரிதரன் கௌரவ விருந்தினராகவும் இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்ததுடன் விழாவினையும் சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்கள் அனைவரும் மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திலிருந்து கல்லூரியின் பாண்ட் அணியின் இசையுடன் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து விழாவின் நிகழ்ச்சிகள் தொடங்கப்பெற்றன. ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் ஆக்கங்களைத் தாங்கிய ‘BLOSSOM’ என்கின்ற சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமை இவ்விழாவின் சிறப்பம்சமாகும். மாணவர்கள் தயாரித்து வழங்கிய ஆங்கில மொழியிலான கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் மற்றும் ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு என்பன முக்கிய நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன.
விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப் படங்களில் எமக்குக் கிடைக்கப் பெற்ற சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “கல்லூரியில் நடைபெற்ற ஆங்கில தின விழாவும் ‘BLOSSOM’ சஞ்சிகை வெளியீடும்.”