காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான ஆசிரியையும் தங்கோடை, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது செட்டித்தெரு, நல்லூர், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமாகிய ஓய்வுநிலை ஆசிரியை திருமதி திலகவதி நாகேந்திரன் இன்று 31-12-2019 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் காரை.இந்துவின் பழைய மாணவனும், ஓய்வு நிலை இலங்கை வங்கி அதிகாரியும், மணிவாசகர் சபையின்; முன்னாள் செயலாளருமாகிய திரு.து.நாகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
நிர்வாகம், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”