சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் உறுதிப்படுத்தப்படாத பெறுபேறுகள் இவ்விணையத்தளம் ஊடாக அண்மையில் எடுத்துவரப்பட்டிருந்தது. தற்போது உத்தியோகபூர்வப் பெறுபேறுகள் முழுமையாகக் கிடைக்கப்பெற்ற நிலையில் காரை இந்துவிலிருந்து தோற்றிய மாணவர்களுள் 41 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்ற தகமையைப் பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை ஒவ்வொரு மாணவர்களும் பெற்றுள்ள மாவட்ட நிலை, தேசிய நிலை, இசற் புள்ளிகள், என்பனவும் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் நோக்கும்போது காரை.இந்துவிலிருந்து தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுள் குறைந்தது 13 மாணவர்களிற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்டதாகும் என்பது மகிழ்ச்சியளிப்பதாகும். இதேவேளை கணிதம், உயிரியல் ஆகிய துறைகளிற்கு மூன்று மாணவர்கள் தெரிவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். கணிதம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் முறைமை தொழில்நுட்பம், வர்த்தகம், கலை ஆகிய துறைகளிலேயே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மாவட்டம், தேசியம், இசற்புள்ளி ஆகியவற்றின் அடிப்படையில் முன்னணி நிலையைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளனர்.
தீவக கல்வி வலய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அதிக அளவான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினைக் கொண்டுள்ள முதன்மைப்; பாடசாலையாக காரை.இந்து விளங்குவது மிகுந்த பெருமையளிப்பதாகும்.
சிறந்த பெறுபேறுகளும் அவற்றினைப் பெற்ற மாணவர்களது விபரமும்:
No | Name | Results | Stream | District Rank |
1 | MissT.Kamsika | ABC | Maths | 112 |
2 | Mas.K.Vasantharuban | 2BC | Bio | 206 |
3 | Miss.B.Kulamathy | 2BS | Bio | 212 |
4 | Mas. K.Mirojan | 2BC | E.Tec | 15 |
5 | Mr.S.Thujavan | BCS | E.Tec | 19 |
6 | Mas.K.Kajanthan | B2C | E.Tec | 17 |
7 | Mas.P.Sinthuja | A2C | B.Tec | 20 |
8 | Miss.S.Ushanthini | ABC | Com | 169 |
9 | Miss.A.Ester | ABC | Arts | 12 |
10 | Miss.K.Priya | B2C | Arts | 32 |
11 | Mas.P.Alexan | ABC | Arts | 48 |
12 | Miss.S.Sinthuja | A2C | Arts | 134 |
13 | Miss.K.Thamilini | A2S | Arts | 205 |
மாணவர்கள் தோற்றியிருந்த பாடங்களும் அவற்றில் அவர்கள் பெற்றுக்கொண்ட சித்தி விகிதமும்:
Subject | Percentage |
Physics | 100 |
Chemistry | 50 |
Biology | 100 |
Combined Maths | 100 |
Engineering Technology | 60 |
Bio Technology | 100 |
Science for Tec. | 62.5 |
ICT | 50 |
Agriculture | 100 |
Accounting | 71.4 |
Business Studies | 71.4 |
Economics | 85.7 |
Geography | 75 |
Tamil | 100 |
Political Science | 100 |
Dance | 100 |
Drama | 100 |
Music | 100 |
Media | 100 |
European History | 60 |
Hindu Civilization | 100 |
சிறப்புச் சித்திகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும், பல்கலைக்கழக அனுமதிக்கு தகமை பெற்ற அனைத்து மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும், இவர்களை திட்டமிட்டமுறையில் வழிப்படுத்திய கல்லூரியின் முன்னாள் பதில் அதிபரும், தற்போதய பிரதி அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.
No Responses to “உயர்தரப் பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகளைப்பெற்று தீவக வலய மட்டத்தில் காரை.இந்து முன்னணி நிலை! சென்ற ஆண்டைவிட இருமடங்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு!”