கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் அகில இலங்கையிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் ‘தமிழோடு இசை பாடல்’ என்கின்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்டிருந்த தமிழிசைப் போட்டியில் காரை.இந்துவின் மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா 3வது இடத்தினைப் பெற்றுக்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
மாகாண மட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பன்னிரண்டு போட்டியாளர்களிற்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை(24-01-2019) கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது செல்வி அமிர்தா தனது இசைத் திறமையை வெளிப்படுத்தி 3வது இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இசை வட்டாரத்தின் பாராட்டினைப் பெற்று இசைத்துறையில் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டு விளங்குபவர் எனக் கருதப்படும் செல்வி அமிர்தா இதற்கு முன்னர் மாகாண மட்டங்களில் இரு போட்டிகளிலும், தேசிய மட்டத்தில் ஒரு போட்டியிலும பங்குபற்றி வெற்றிபெற்றிருந்தவர் என்பதுடன் இப்போது இவர் பெற்றிருக்கின்றது தேசிய மட்டத்திலான 2வது சாதனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் வெற்றிபெற்றவர்களிற்கான விருதும் சான்றிதழும் வழங்கும் வைபவம் வெள்ளவத்தை, கொழும்பிலுள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்றைய தினம் (25-01-2020); நடைபெற்றபோது செல்வி அமிர்தா விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் ஒரு தேசிய மட்டச் சாதனையை ஏற்படுத்தியதன் மூலம் காரை.இந்துவிற்கு மேலும் புகழ் சேர்த்த செல்வி அமிர்தா ஆனந்தராசாவை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மீண்டும் ஒருமுறை பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகின்றது.
செல்வி அமிர்தா தமக்கான விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
செல்வி அமிர்தாவின் முன்னைய சாதனைகள் தொடர்புபட்ட செய்தியை கீழே பார்வையிடலாம்:
மாகாண மட்ட இசைப் போட்டிகளில் வெற்றிபெற்று காரை.இந்துவைப் பெருமைப்படுத்திய இரு சகோதர மாணவர்கள்.
No Responses to “மீண்டும் ஒரு தேசிய மட்டச் சாதனையை நிலைநாட்டி காரை.இந்துவிற்கு மேலும் புகழ்சேர்த்த மாணவி அமிர்தா ஆனந்தராசா.”