மரண அறிவித்தல்
திருமதி தேவநாயகி (தவநாயகி) பாலசிங்கம்
(முன்னாள் அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி – முன்னாள் அதிபர், வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி – முன்னாள் விரிவுரையாளர், அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை – முன்னாள் விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம் – ஓய்வுநிலை உதவிப் பரீட்சை ஆணையாளர்)
தோற்றம்: 09-02-1950 மறைவு: 23-02-2020
பொன்னாவளை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெகிவளை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவநாயகி பாலசிங்கம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான Dr.அம்பலவாணர்-பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் (ஓய்வுநிலை உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) ஆருயிர் மனைவியும், ஜனகனின் அன்புத் தாயாரும், தவபாலன், சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தேவகி, சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற நாகம்மாவின் சகலியும், சிறிதரன், காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் 24-02-2020 திங்கட்கிழமை முற்பகல் 9.00மணி முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பித்து பிற்பகல் 3.30மணியளவில் அத்திரிய பொது மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்: ஜனகன்(மகன்) – 0777877003
No Responses to “மரண அறிவித்தல், திருமதி தவநாயகி பாலசிங்கம்”