.கொரோனா வைரஸ்(COVID19) எனப்படும் உயிர்கொல்லிக் கிருமியின் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் கட்டுங்கடங்காது பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கங்களால் எடுக்கப்பட்டு வருகின்ற தவிர்க்கமுடியாத நடவடிக்கைகளினால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளாந்தம் உழைத்து வாழுகின்ற வாழ்வாதார வசதி குறைந்த மக்கள் பட்டினி நிலையினை எதிர்கொள்கின்ற துர்ப்பாக்கியமான நிலை உருவாகியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்ட பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்வாதார வசதி குறைந்த காரை உறவுகள் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக பத்து இலட்சம் ரூபாவினை உதவுவதெனத் தீர்மானித்துள்ளதாக நட்புரிமையுடன் எமக்கு அறியத்தந்துள்ளனர். காரைநகர் பிரதேச செயலரின் வழிகாட்டுதலுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட காரை உறவுகளிற்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்ற சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்துவதன்மூலம் குறிப்பிட்ட திட்டம் குறித்த விபரமான செய்தியை பார்வையிடலாம்.
No Responses to “கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட காரை உறவுகளிற்கு முதற்கட்ட உதவியாக பத்து இலட்சம் ரூபாவினை வழங்க பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் முடிவு.”