.2019, டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையம் ஊடாக வெளியிடப்பட்டிருந்த நிலையில் காரை.இந்துவின், உத்தியோகப்பற்றற்ற முறையில் கிடைக்கப்பெற்ற சில பெறுபேறுகள் குறித்த விபரம் எடுத்து வரப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததேயாகும். கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னிலைப் பெறுபேறுகளின் முழுமையான விபரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப்(8A, B) பெற்றுக்கொண்ட மாணவி செல்வி கஜந்தினி விஜயகுமார் உள்ளிட்ட மாணவர்கள் பலரும் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டு காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை பரீட்சைக்குத் தோற்றியிருந்த 57 மாணவர்களுள் 36 (63.15வீதம்) மாணவர்கள் உயர்தர வகுப்பில் (G.C.E.A/L)பயில்வதற்கான தகமையைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்ற அதேவேளை இவர்களது சாதனைக்கு உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களையும், அனைவரையும் சிறந்த ஆளுமையுடன் நெறிப்படுத்திய முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் கூடவே பாராட்டி வாழ்த்துவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பெருமையடைகின்றது.
முன்னிலைப் பெறுபேறுகளைப் பெற்ற சாதனை மாணவர்களினதும் அவர்கள் பெற்ற பெறுபேறுகளின் விபரங்களும்:
No Responses to “க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் முன்னிலைப் பெறுபேறுகளைப் பெற்ற காரை.இந்துவின் மாணவ சாதனையாளர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”