பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும, புதிய நிர்வாக சபைத் தேர்தலும் இம்மாத இறுதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொறோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையினால் திட்டமிட்டபடி இவற்றினை நடாத்தமுடியாத நிலையினை தாங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம். தற்போதய நெருக்கடி நிலை சீரடைந்து இயல்புநிலை ஏற்பட்டதும் பொதுக் கூட்டத்திற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு ஏற்ப அறியத்தரப்பட்டு தேர்தலும் நடாத்தப்படும்.
இவ்வாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களிற்கான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிவித்தலை கீழே பார்வையிடலாம்:
No Responses to “புதிய நிர்வாக சபையினைத் தெரிவுசெய்வதற்கான பொதுக் கூட்டம் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை குறித்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அறிவித்தல்.”