.காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்டையில் முன்னிலைப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்களுடன், 36 மாணவர்கள்(63.15வீதம்) உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதற்கான தகமையைப் பெற்றுள்ளார்கள் என்ற தகவலும் எமது இணையத்தளத்தில் ஏப்பிரல் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்கள் வேறோர் இணையத் தளம் ஒன்றிலும் வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாது கல்லூரியின் கல்வி நிலை தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தது. வேறு சிலரும், உயர்தரம் கற்கத் தகமையைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த முரண்பாடு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்விடயங்கள் அனைத்தும் , கல்லூரி அதிபரினதும் தாய்ச் சங்கத்தினதும் கவனத்திற்கு கனடாக் கிளை நிர்வாகத்தினால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடரந்து விளக்கமான கடிதம் ஒன்று அதிபரிடமிருந்து சங்க நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. க.பொ.த.உயர்தரம் கற்கத் தகமையைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 பேர்(63.15வீதம்) என்பதை இக்கடிதத்தின் மூலம் அதிபர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விளக்கத்தினையும் தந்துள்ளார்.
உயர்தரம் கற்கத் தகுதியுடையவர்கள் தொடர்பில் வெளிவந்த மாறுபாடான தகவல்கள் காரணமாக எமது சங்கத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டிருக்கக்கூடிய தவறான புரிந்துணர்வினை நீக்கிவைத்து தெளிவினை ஏற்படுத்தும் வகையில் அதிபரின் கடிதம் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளது.
அதிபரின் கடிதத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “க.பொ.த.உயர்தரம் கற்கத் தகமையைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கல்லூரி அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள விளக்கம்”