காரைநகர் இந்துக் கல்லூரியின் அவசிய தேவைகளிற்கு உதவும் பொருட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிரந்தர வைப்புத்திட்டத்திற்கான உதவித்தொகை மூன்று பகுதிகளாக தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்வுதவு தொகைகள் தேசிய சேமிப்பு வங்கியின் காரைநகர் கிளையில் வேறுவேறு திகதிகளில் தாய்ச் சங்கத்தின் பெயரில் நிரந்தர வைப்பிலிடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு சென்ற யூன் மாதம் 29ஆம் திகதி மீள வைப்பிலிடப்பட்டு இரண்டு மில்லியன் ரூபாவிற்கான ஒரு தனிச் சான்றிதழாகப் பெறப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த வைப்புத் தொகையின் ஊடாக ஆண்டுதோறும் பெறப்படும் வட்டித் தொகையானது குறிப்பிட்ட அவசிய தேவைகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை உள்ளடக்கியதாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு தாய்ச் சங்கத்தின் சார்பிலும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பிலும் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தினதும் நிரந்தர வைப்புச் சான்றிதழினதும் பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
தொடர்புபட்ட செய்தியை கீழே பார்வையிடலாம்
No Responses to “பழைய மாணவர் சங்க் கனடாக் கிளையின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இரண்டு மில்லியன் ரூபா உதவித் திட்டத்தின் பயன்பாடு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த விபரம்.”