karainews.com இணையத்தளம், ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை ஆகியவற்றின் தொகுப்பாளரும், காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினராகவும் அனுசரணையாளராகவும் இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றவருமான திரு.பிரமேந்திரதீசன் அவர்களின் அன்புத் தந்தையாரான திரு.பொன்னையா திரவியநாதன் அவர்கள் இன்று 01-09-2020 செவ்வாய்க்கிழமை ஆறுகால்மடம், யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
எமது நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் இணையத்தளமான karainagar.com இல் வெளியிடப்பெற்றுள்ள அன்னாரின் குடும்பத்தின் சார்பிலான மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்.
மரண அறிவித்தல், திரு.பொன்னையா திரவியநாதன் (சுதுமலை) (காரைநகர்) (ஆனைக்கோட்டை)
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”