ஸ்ரீலங்காவின் வர்த்தகத் துறையில் காரைநகர் மக்களிற்கு தனியிடம் ஒன்று உண்டு. வர்த்தகத்துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் கடின உழைப்பினால் உயர்ந்து புகழ்பெற்ற பல பெருமை மிக்க வர்த்தகர்களை உருவாக்கி மகிழ்ந்த கிராமமம் காரைநகராகும். அத்தகைய வர்த்தகர்கள் வரிசையில் ‘சீமாட்டி சற்குணம், என அனைவராலும் நன்கு அறியப்பட்டவரும, சிறந்த சமய, சமூக உணர்வாளருமாகிய திரு.கதிரவேலு தம்பிப்பிள்ளை சற்குணராசா அவர்கள் விளங்குகின்றார். திரு. சற்குணராசா அவர்கள் ‘சீமாட்டி புடவை மாளிகை’ என்கின்ற வர்த்தக நிறுவனத்தை யாழ்நகரில் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடாத்தி வருவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவராக விளங்கிய போதிலும் காரைநகரிலும், யாழ்ப்பாணத்திலும் உள்ள பல முக்கியமான முன்னணி சமய, சமூக சேவை அமைப்புக்கள் பலவற்றின்; நிர்வாகங்களில் பொறுப்பான பதவிகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு மக்கள் நலன்புரிச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதன் ஊடாக மேலும் பிரபல்யம் பெற்று மக்களின் அன்பினைப் பெற்றவராக உள்ளார்.
இத்தகைய பெருமைக்குரிய திரு.சற்குணராசா அவர்கள் காரை.இந்து அன்னையின் மைந்தன் என்பதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த பெருமிதம் கொள்கின்றது. கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆயுட்கால உறுப்பினரான இவர் சங்கத்தின் நிர்வாகத்தில் சுமார் இருபது ஆண்டுகளிற்கு மேலாக இடம்பெற்று கல்லூரியின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருபவர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். இன்று மணிவிழாக் காணும் காரை.இந்துவின் மைந்தன் திரு.சற்குணராசா அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
திரு.சற்குணராசா அவர்களின் வணிகர் கழக நண்பர்களினால் வெளியிடப்பெற்ற மணிவிழா வாழ்த்தில் அவர் அங்கம் வகித்து சேவையாற்றிய, சேவையாற்றி வருகின்ற சமூக, சமய அமைப்புக்களின் விபரத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “மணிவிழாக் காணும் காரை இந்துவின் மைந்தன் தம்பிப்பிள்ளை சற்குணராசா அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்தி மகிழ்கின்றது.”