காரைநகர் இந்துக் கல்லூரியில் 2005ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் பின்வருவோர் உப அதிபர்களாக பணியாற்றியுள்ளதாக 2005ஆம் ஆண்டு வெளிவந்த சயம்பு மலரில் பதிவிடப்பட்டுள்ளது.
கல்லூரியின் உப அதிபர்கள்
திரு.M.வைத்தியநாதன் B.Sc.
திரு.N.சபாரத்தினம் B.A., Dip.in.Edu.
திரு.M.இளையதம்பி B.A.
திரு.M.சிவபாலராசா B.Sc.
திரு.V.தர்மசீலன் B.Sc.
கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை M.A., Dip.in.Edu.
திரு.S.சண்முகரத்தினம் B.A., Dip.in.Edu.
திரு.S.பத்மநாதன் B.Sc.
திரு.S.தம்பிராசா B.Sc., Dip.in.Edu.
திருமதி.தே.பாலசிங்கம் B.Sc.,Dip.in.Edu., S.L.P.S. 2 I
பண்டிதர் M.S.வேலாயுதபிள்ளை S.L.P.S. 2 II
திரு.சி.பொன்னம்பலம் B.A., S.L.P.S. 2 II
திரு.K.குமாரவேலுSpecial Trd. Eng., S.L.T.S. I
மேற்குறிப்பிடப்பட்டவர்களுள் திரு.ஏ.தர்மசீலன், கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை, திரு.S.பத்மநாதன், திருமதி தே.பாலசிங்கம், பண்டிதர் M.S.வேலாயுதபிள்ளை, திரு.K.குமாரவேலு ஆகிய ஆறு பேரும் அதிபர்களாக பதவி உயர்வு பெற்று இக்கல்லூரியிலேயே பணியாற்றியிருந்தனர். இவர்கள் குறித்த விபரம் புகைப்படங்களுடன் இவ்விணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் ABOUT SCHOOL என்ற பிரதான பிரிவின் கீழ் PAST PRINCIPALS என்ற உப பிரிவில் பதிவிடப்பட்டுள்ளதை பார்வையிடமுடியும். ஏனைய உப அதிபர்களின் சேவை குறித்து சயம்பு மலரில் பதிவிடப்பட்டவற்றினை நன்றியோடு அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் வாசகர்களின் பயன் கருதியும் இவ்விணையத்தளம் மீள் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றது.
திரு.M.வைத்தியநாதன் B.Sc. (1942 – 1954)
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் க.பொ.த.(சாதாரணம்) மாணவர்களிற்கு இரசாயனவியல் பாடத்தை மிகச் சிறப்பாகப் போதித்து வந்தார். அக்காலத்தில் இப்பாடம் ஆங்கில மொழி மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. பாடசாலை ஒழுக்காற்றுச் சபை பொறுப்பாசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியனவற்றை கவனித்து வந்தார். இவர் கல்லூரியின் நிர்வாக விடயங்கள் அனைத்திலும் பங்குகொண்டு செயற்பட்டபவர். நைட்டிய பிரமச்சாரியான இவர் ஆன்மீகநெறியில் வாழ்ந்தவராவார். மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டியவர். உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் யாழ்ற்ரன் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
திரு.N.சபாரத்தினம் B.A.(Lon.) Dip.in.Edu. (1949 – 1963)
ஆங்கிலம், சரித்திரம் ஆகிய பாடங்களை மாணவர்கள் மனம்கொள்ளத்தக்க வகையில் சிறப்பாகக் கற்பித்தவர். நிர்வாகத் திறமையுள்ள இவர் கல்லூரி நிர்வாக விடயங்கள் அனைத்திலும் பங்குகொண்டு கல்லூரி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தவதற்கு பெரும்பங்காற்றினார். தெளிந்த சிந்தனையாளராகவும் சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றவராகவும் முற்போக்கு எண்ணம் கொண்டவராகவும் விளங்கினார். பிற்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக எழுத்துலகில் பிரகாசித்தார்.
திரு.M.இளையதம்பி B.A.(Lon.), P.Gr.Trd. Eng. (1958 -1969)
மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசித்து வந்தவருமான இவர் நல்லாசிரியராகவும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அன்புடன் மதிக்கப்;பெற்றவராகவும் விளங்கினார். நிர்வாகத் திறமையுள்ள இவர் துணை அதிபராகவும் கடமையாற்றினார். சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சிறப்பாகக் கற்பித்தவர். ஆறாந்தரம் தொடக்கம் உயர்தர வகுப்பு வரை சரித்திர நூல்களை எழுதியுள்ளார். இனிய பண்புகள் படைத்தவர். பழகுவதற்கு எளிமையானவர். ஆசாரசீலர். கடமையில் கட்டுப்பாடும் கண்ணியமும் உடையவர். மக்களின் நன் மதிப்பைப் பெற்ற தெளிவான சிந்தனையாளராகவும் சமூக சேவையாளராகவும் விளங்கினார். இவரிடம் ஆங்கிலம் பயின்ற பல மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றதோடு வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இறைபதம் எய்திய இவரது நினைவு தினம் கல்லூரியில் வருடாவருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.
திரு.S.தம்பிராசா B.Sc., Dip.in.Edu. (1984 -1993)
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு பௌதிகவியல் பாடத்தையும் ஏனைய வகுப்புக்களில் கணித பாடத்தையும் கற்பித்தவர். அமைதியும் சாந்தமும் நிறைந்த இவர் மிகுந்த ஆசார சீலராகவும் கடவுள் பக்தி உடையவராகவும் கடமையில் ; கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்கவராகவும் இருந்தார். அதிபருடன் இணைந்து நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு ஊக்கமளித்தவர். 1990இல் பண்டத்தரிப்புக் கோட்டத்தில் சிறந்த ஆசிரியராகத் தெரிவுசெயய்யப்பட்டவர். பாடவேளையின்போது பாடவேளை முழுவதையும் மாணவர் மனம் கொள்ளத்தக்க வகையில் பயன்படுத்தவேண்டும் எனும் நன்னோக்கோடு செயற்பட்டவர்.
திரு.சு.சண்முகரத்தினம் B.A.Dip in Ed. (1975 – 1996)
கல்லூரியின் பழைய மாணவன். புவியியல், சமூகக்கல்வி, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சிறப்புடன் போதித்தவர். பதவிகளை விரும்பாத இவர் கல்லூரியின் வளர்ச்சி கருதி பகுதித் தலைவராகவும் உப அதிபராகவும் கடமையாற்றினார். தனது சேவைக் காலத்தில் நிர்வாகச் செயற்பாடுகளில் அதிபர்களிற்கு வலதுகரமாய் விளங்கியவராவர். கல்லூரியில் பணியாற்றிய அதிபர்கள் யாவரும் தமது திட்டங்களை இவரது ஆலோசனையைப் பெற்றே செயற்படுத்தினர். கல்லூரி நிர்வாகத்தின் மூளை எனப் பலராலும் போற்றப்பட்டவர். அமைதியும் சாந்தமான சுபாவமும் கொண்ட இவர் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க உறுதியான வழியைக் காட்டியவராவர்.
திரு.S.பொன்னம்பலம் B.A., Gen.Trd. (1995 -2000)
இடம்பெயர்ந்து இயங்கிய காலத்தில் கல்லூரியில் இணைந்து கொண்டார். சமயம், தமிழ் ஆகிய பாடங்களை இடைநிலை வகுப்புக்களில் கற்பித்தார். மீளக்குடியமர்ந்து சொந்த இடத்தில் இயங்கியபோது க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் இந்துநாகரிகம், இந்து சமயம் ஆகிய பாடங்களை கற்பித்து ஆசிரியர் இல்லாத குறையை நிவர்த்தி செய்து மாணவர்கள் உயர்பெறுபேறு பெற்றுக்கொள்ள வழிவகுத்தவராவர். காரைநகர் சயம்பு வீதியைச் சேர்ந்த இவர் சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ், இந்துநாகரிகம், இந்துசமயம் ஆகிய பாடங்களிற்கு பல நூல்களையும் வழிகாட்டிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். கல்லூரி ஸ்தாபகர் சயம்பு அவர்களை நினைவுகூரும் வண்ணம் சயம்பு மணி மண்டபத்தினையும் சிலையையும் நிறுவுவதற்கு பெரும் பங்காற்றியவராவார்.
No Responses to “காரை.இந்துவில் பணியாற்றிய உப அதிபர்கள்.”