புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று புலவர், .B.O.L. ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக புகழ்பெற்ற கே.பி.கரன் அவர்கள் பணியாற்றியிருந்த காலத்தில் புலவர் பூரணம் அவர்கள் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய சிறப்புக்குரியவர். கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியையுமாகிய இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல சேவை அமைப்புக்களில் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து தொண்டாற்றியவர். பல சஞ்சிகைகளிற்கு கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருவதுடன் சமய, இலக்கிய சொற்பொழிவுகளையும் செய்து வருபவர். சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இடையில் பல ஆண்டுகள் வெளிவராது தடைப்பட்டிருந்த ‘ஈழநாடு’ பத்திரிகை மீண்டும் வெளிவரத் தொடங்கிய 1வது ஆண்டு நிறைவையொட்டி 12-11-2020இல் வெளியிடப்பெற்ற சிறப்பிதழில் புலவர் பூரணம் அவர்கள் எழுதிய ‘உயர்வு தந்த ஏணி’ என்ற தலைப்பிலான கட்டுரை இடம்பெற்றுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரியில் 15ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றி கல்லூரிக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவரான பல சிறப்புக்கள் பொருந்திய புலவர் பூரணம் ஏனாதிநாதன் அவர்கள், ஏணியாக நின்று தனது வாழ்க்கையை உயர்த்தியது ‘ஈழநாடு’ செய்தித்ததாள் எனப் பதிவுசெய்து வரைந்த மேற்குறித்த கட்டுரையினை இவ்விணையத்தளம் மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றது.
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியை புலவர் பூரணம் ஏனாதிநாதன் அவர்களை உயர்த்திவிட்ட ‘ஈழநாடு’”