நீலிப்பந்தனை, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் எமது தாய்ச் சங்கத்தின் பொருளாளரான திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்), எமது கல்லூரி அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளர் திருமதி நிரஞ்ஜினி செந்தூரன் (பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், எமது சங்கத்தின் உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியம் ஞானேஸ்வரன் (ஸ்ரீ), திரு.சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் (ரவி), ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆகிய திரு.கணபதிப்பிள்ளை அழகேந்திரன் அவர்கள் இன்று 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”