கொழும்பிலிருந்து வந்திருந்ததாகக் கூறப்படும் காரைநகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் சென்று வந்ததாக இனம் காணப்பட்டுள்ள பல இடங்களையும், நிறுவனங்களையும் சேர்ந்த தொடர்புடையவர்கள் சுகாதாரப் பகுதியினரால் தனிமைப்படுத்தப்பட்டு வருவதுடன் பீ.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்தி ஊடகங்கள் மூலமாக அறியமுடிகிறது. குறித்த தொற்றுநோயாளர் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி திங்கட்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் tamilwin.com என்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியை கீழுள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்.
https://www.tamilwin.com/community/01/262561?ref=home-latest
No Responses to “காரைநகரின் கொரோனா நோய்த்தொற்றாளர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொற்று அபாயம் காரை.இந்துவையும் விட்டுவைக்கவில்லை. கல்லூரி மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது!”